14/08/2015

இயற்கை உணவின் முன்னோடி மூ.ராமகிருஷ்ணன் அவர்களின் நூல்: ”நோயின்றி வாழ முடியாதா?”


அமரர். புலவர். மூ. இராமகிருஷ்ணன் அவர்களைப் பற்றி எழுத்தாளர் திரு. ஜெயமோகன் அவர்களின் வலைத்தளத்தின் மூலம்தான் அறிந்தேன். அன்னாரின்நோயின்றி வாழ முடியாதா?” என்கிற சிறு வெளியீட்டினை ஜெயமோகன் மலையாள மொழியில் மொழிபெயர்த்தது குறித்தும் குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த புத்தகம் இப்போது தன்னிடம் இல்லையென்றும் சொல்லியிருந்தார்.
                                    
இந்த நிலையில் மக்கள் மருத்துவர். திரு. சாமிஅழகப்பன் அவர்களின்   ”மச்சமுனி”  வலைத்தளத்தில்,  ”இயற்கை உணவே நோய் தீர்க்கும் மருந்து”  நூலின் ஆசிரியர். திரு. மூ.. அப்பன் அவர்கள் நடத்திய இயற்கை உணவு பற்றிய ஒரு முகாமில் கலந்து கொண்டது பற்றி எழுதியிருந்தார். கூடவே அடுத்து  நடக்கவுள்ள முகாம் பற்றியும் அறிவித்திருந்தார்.
                                                                   
நானும்  தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன் பட்டினத்தில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த  முகாமில் கலந்து கொண்டேன். அதை நடத்திய திரு. மூ..அப்பன்அமரர். புலவர்.மூ. இராமகிருஷ்ணன் அவர்களின் இளைய சகோதரர் ஆவார். அவரிடம், அமரர்.புலவர். மூ.இராமகிருஷ்ணன் அவர்கள் எழுதிய புத்தகம்  உள்ளதா என கேட்டேன். தன்னிடம்  அதன் ஆங்கில மொழிபெயர்ப்பு  மட்டுமே  இருப்பதாக  தெரிவித்தார்அதைத்தான்  இங்கு பதிந்துள்ளேன். திரு.மூ..அப்பன் அவர்களுக்கு நன்றி.
                                                   
இயற்கை உணவு, இயற்கை மருத்துவம் ஆகிய விஷயங்களுக்காகஎந்த ஒரு பலனையும் எதிர்பாராமல்  தன்னையே அர்ப்பணித்து, மக்களுக்கு தொண்டாற்றிய அருளாளர்  அமரர். புலவர்.மூ.இராமகிருஷ்ணன் அவர்கள்அனைவரும் படித்துப்  பயன் பெறவேண்டுமாறு கேட்டுக் கொள்கின்றேன்.
       
                           
ஒரு வேண்டுகோள்இந்த வெளியீட்டின் தமிழ் மூலம் யாரிடமாவது  இருந்தால் அனுப்பி வைக்கவும்அல்லது  வாய்ப்பிருப்பவர்கள்  இதையே  தமிழில் மொழிபெயர்த்தாவது அனுப்புங்கள்.   அதை  உடனே  பதிவிட தயாராக உள்ளேன். இன்னும் பரவலாக  அமரர். புலவர். மூ.இராமகிருஷ்ணன் அவர்களின் வாழ்நாள் செய்தி  அனைவரையும் போய்ச் சேர வாய்ப்பு கிடைக்கும்
***

No comments:

Post a Comment