08/12/2019

நண்பர்களே,

  • நான் பணியாற்றும் மருத்துவமனை வளாகத்தில் ஏற்கெனவே 3000 சதுர அடியில் ஒரு மூலிகைத்தோட்டம் உருவாக்கியுள்ளோம். அதில் 150க்கும் அதிகமான மூலிகைகள் உள்ளன. தற்போது 4000சதுரஅடியில் அடர்வனம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் 160க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன.

             இயற்கையை பாதுகாக்க பாடுபடும்  சுயநலமில்லா  ஆர்வலர்களின் அமைப்பு   அத்தி.
இந்த அடர்வனத்தை உருவாக்கியதிலும், தொடர்ந்து பராமரிப்பதிலும் பெரும்பங்கு வகிக்கிறது. இந்த அமைப்பின் முன்னோடியாக விளங்குபவர் மதிப்பிற்குரிய வானவன் அவர்கள். இவர் நம்மாழ்வார் விருது உள்ளிட்ட பல விருதுகள்  பெற்றவர்.
 அடுத்தபடியாக குறிப்பிடப்படவேண்டியவர் நனை அமைப்பின்  ஈஷ்வர் அவர்கள்.  மரக்கன்றுகள் தேவை எனக்கேட்டவுடன் தயங்காமல் இலவசமாக கொடுத்து உதவினார். நனை அமைப்பு சென்னையை பசுமையாக்க பாடுபடும் தன்னலம் கருதா இதயங்களின் கூட்டணி.
    இவர்கள் மட்டுமில்லை, அடர்வனம் உருவாக்க அனுமதி அளித்து, இடம் ஒதுக்கி கொடுத்து ஊக்குவித்த தலைமை மருத்துவர் மற்றும் மூலிகைத்தோட்டத்தையும் அடர்வனத்தையும் தன் உயிருக்கு நிகராக நேசிக்கும் சித்த மருத்துவ அலுவலர்  ஆகிய அனைவருக்கும் எனது வணக்கத்தையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

05/12/2019

நண்பர்களே வணக்கம்.
மீண்டும் உங்களை சந்திப்பதில் மனம் நிறைகின்றது. தொடர்ந்து பல விஷயங்களை குறித்த எனது கருத்துக்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள உள்ளேன்.
நன்றி.